FEW DETAILS ABOUT SOME LEGENDS
- Akio Morita இவா் உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.
SONY (ORIGIN OF NAME)
இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 இல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார்.
2.Julius Caeser உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்.ஆங்கில நாடக மேதை வில்லியம்ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் கிபி 1599 நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்கால பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி, சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்
யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார்
தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி.மு.78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.
சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார்.
பொம்பெய் என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.
ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
3.Pele பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் விளங்குபவர்
1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலின் டிரெசு கோரகோயெசு என்ற பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தாமஸ் ஆல்வாஸ் எடிசனின் நினைவாக இவருக்கு எடிசன் என்ற பெயர் சூட்டப்பட்டது. இவரது செல்லப்பெயர்தான் பெலே ஆகும். அவரது தந்தை தொழில்முறையான காற்பந்தாட்ட வீரராக இருந்தவர். அவரது முழங்காலில் காயம் ஏற்படவே அவர் காற்பந்தாட்டத்தை விட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெலேவுக்கு நான்கு வயதானபோது அவரது குடும்பம் பவுரு என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தது. பெலேயும் அந்த வட்டாரத்தில் வசித்த சிறுவர்களும் காலுறையில் செய்தித்தாள்களையத் திணித்து ஒரு பந்துபோல் செய்து அதனைக்கொண்டு காற்பந்து விளையாடி மகிழ்வர். காலை முதல் மாலை வரை விளையாடுவார்கள். பெலேயின் தந்தையே அவருக்கு காற்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுத்தந்தார். காற்பந்து ஆடாத நேரங்களில் பிறரது காலணிகளுக்கு பூச்சிடும் வேலை செய்தார் பெலே
பெலேயின் திறமை பவுரு நகர காற்பந்து குழுவில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது.அடுத்த மூன்று ஆண்டுகளும் இளையோர் பிரிவில் வெற்றியாளர் விருதை வென்றது அந்தக்குழு. அதன்பிறகு நிபுனுத்துவ காற்பந்தாட்டம் அவரை அழைத்தது. சான்டாஸ் குழுவில் சேர்ந்தார் பெலே. சேர்ந்த முதல் ஆண்டிலேயே சாதனை அளவாக பதினேழு கோல்களைப் புகுத்தினார்.அவரது அபாரத்திறன் 1958 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் தேசியக் குழுவில் இடம்பெற்றுத் தந்தது. அந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 2:5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக வென்றது பிரேசில். அந்த வெற்றிக்கு நடுநாயகமாக விளங்கியது பெலேயின் அபாரத்திறன்தான். உலகக் கிண்ணத்தை அவர் வென்றபோது அவருக்கு வயது பதினேழு.
.jpg)
No comments:
Post a Comment