Sunday, 13 April 2014

பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார்.
அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்காமல் போனதுதான், ‘அரசியல்வாதிகள் என்போர் சமூக விரோதிகள்என்ற புதிய அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறது.

அந்தப் பேட்டி (2.7.1961):
விருது நகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது.

அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன நாடார் வீதி எனும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான். ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்க சுவர்களிலும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்யமூர்த்தியின் உருவம்.
கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.
வாங்கய்யா…” என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

பண்புமிக்க அந்த மூதாட்டியார், ‘நீங்கள் யார்?’ என்று கூட கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம் (இன்றைக்கு முதல்வரின் தாயார் அல்லது உறவினரை பேட்டியெடுக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்!).

ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை,
தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த, தங்கள் திருமுகத்தைக் கண்டுபோகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?”

ஆமாம் அய்யாஅது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்!தொட்டிலில் இட்டு, தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.

தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”

நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..

சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையாஎன்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”

நல்லாச் சொன்னீங்கய்யாஅவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”
போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”

நல்லாச் சொன்னீங்கய்யாதங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வாஎல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”

இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”
உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”

மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”
அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”

எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”
“120 ரூபாய்பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானாசெய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யாரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களேஇதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதேஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)

இந்த வீடு எப்போது கட்டினது?”
அவன் பிறக்கிறதுக்கு முந்தியே கட்டினது. எனக்கு 17 வயசிலயே அவன் பிறந்தான். எனக்கு இருவத்தியஞ்சில அவன் தகப்பனார் இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து வித்து செலவழிச்சிட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசுல, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடா பட்டேன். ஒரு வாத்தியார இட்டு வந்து படிக்கச் சொன்னேன்…”

ஏன் படிப்பை விட்டுட்டாரு…”
எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டுல தங்க மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடா படுத்துவான். கொட்ற மழையில எங்க போவானோஎங்க திரிவானோவலைப் போட்டு தேடுனாலும் அம்பட மாட்டான். சரி, வெயிலடிச்சா வருவானாஅப்பவும் வரமாட்டான்.
ஆனா ஒண்ணு.. அப்பவும் தலைவலின்னு படுத்ததில்ல.. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையில ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்க போச்சோ தெரியல அந்தக் கோவமெல்லாம். அப்படி இருந்தவனா இப்படி அறிவாளியாகிட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கய்யாஅதோ இருக்காரே முருகன்அவன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்..!
இதைக் கூறும்போது, அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’, என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு!

உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும், அவர் அறிவாளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்…”

ஆமாம் அய்யாஅவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன், சீராட்டினேன்…”, தன் மணிக் கரங்களை பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.
நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள். இன்று அவர் கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன…”
உண்மைதானய்யா…”

நேரு இங்கு வந்திருந்தபோது, தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமேஅவர் என்ன சொன்னார்?”
சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலேதான் இருந்தான்.

நேருஜி என்ன சொன்னார்?”
அவங்க பாஷை எனக்குப் புரிதாய்யாஎன்னமோ சொன்னாருவேறென்ன சொல்லியிருப்பாருஎல்லாரையும்போல் இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலின்னுசொல்லியிருப்பாரு…!”

இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மாநாங்கள் விடைப் பெற்றுக் கொள்ளலாமா?”
மகனைப் பெற்று வளர்த்து இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும் சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை…”
அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

ஏன் கண்கலங்குகிறீர்கள்இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடையுங்கள்.

துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”, என்று கூறினார்.
தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்!

·         "காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார்.

அறைக்குள்ளிருந்த கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டுவந்து போட்டார்கள்.

காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

"
நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார்.

இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது."

Top of Form


Useful websites

  1. http://www.kids.noolagam.com/
  2. http://tamilkalam.in/
  3. http://www.tamilvu.org/
  4. http://onlytamiltamil.blogspot.in/2011/01/tamil-general-knowledge-qa.html

Tamil Language
         
                      இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
                
                    தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களானகர்நாடகம்கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும்முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.


Thursday, 10 April 2014


இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம்.
1. Belarc Advisor
belarc_logo
சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும்  எல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு அந்த மென்பொருட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்றை தரும்.
Magical Jelly Bean Keyfinder
இந்த மென்பொருளும் உங்கள் மென்பொருட்களின் Serial Number – களை கண்டுபிடித்து தரும். மிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீங்கள் சேமித்துக் கொள்ளலாம்.

FEW DETAILS ABOUT SOME LEGENDS 

  1. Akio Morita இவா்  உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். 


 SONY (ORIGIN OF NAME)
 இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 இல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார்.


2.Julius Caeser உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்.ஆங்கில நாடக மேதை வில்லியம்ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் கிபி 1599 நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்கால பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி, சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்

யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார்

தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி.மு.78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.

சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார்.

பொம்பெய்  என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.

ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.

3.Pele பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் விளங்குபவர்

1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலின் டிரெசு கோரகோயெசு  என்ற பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தாமஸ் ஆல்வாஸ் எடிசனின் நினைவாக இவருக்கு எடிசன் என்ற பெயர் சூட்டப்பட்டது. இவரது செல்லப்பெயர்தான் பெலே ஆகும். அவரது தந்தை தொழில்முறையான காற்பந்தாட்ட வீரராக இருந்தவர். அவரது முழங்காலில் காயம் ஏற்படவே அவர் காற்பந்தாட்டத்தை விட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெலேவுக்கு நான்கு வயதானபோது அவரது குடும்பம் பவுரு என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தது. பெலேயும் அந்த வட்டாரத்தில் வசித்த சிறுவர்களும் காலுறையில் செய்தித்தாள்களையத் திணித்து ஒரு பந்துபோல் செய்து அதனைக்கொண்டு காற்பந்து விளையாடி மகிழ்வர். காலை முதல் மாலை வரை விளையாடுவார்கள். பெலேயின் தந்தையே அவருக்கு காற்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுத்தந்தார். காற்பந்து ஆடாத நேரங்களில் பிறரது காலணிகளுக்கு பூச்சிடும் வேலை செய்தார் பெலே

பெலேயின் திறமை பவுரு நகர காற்பந்து குழுவில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது.அடுத்த மூன்று ஆண்டுகளும் இளையோர் பிரிவில் வெற்றியாளர் விருதை வென்றது அந்தக்குழு. அதன்பிறகு நிபுனுத்துவ காற்பந்தாட்டம் அவரை அழைத்தது. சான்டாஸ் குழுவில் சேர்ந்தார் பெலே. சேர்ந்த முதல் ஆண்டிலேயே சாதனை அளவாக பதினேழு கோல்களைப் புகுத்தினார்.அவரது அபாரத்திறன் 1958 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் தேசியக் குழுவில் இடம்பெற்றுத் தந்தது. அந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 2:5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக வென்றது பிரேசில். அந்த வெற்றிக்கு நடுநாயகமாக விளங்கியது பெலேயின் அபாரத்திறன்தான். உலகக் கிண்ணத்தை அவர் வென்றபோது அவருக்கு வயது பதினேழு.

திடல் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, கண கச்சிதமாக பந்தை தள்ளும் முறை, லாவகமாக இரண்டு மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தும் மந்திரம், குறி தவறாமல் பந்தை வலை சேர்க்கும் தந்திரம் என இவற்றால் காற்பந்து ரசிகர்களை கிறங்கச் செய்தார் பெலே. 1970 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அபரிமிதமான திறன் காட்டி 4:1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை பெற உதவினார் பெலே. அந்த ஆட்டத்தில் அவர் தலையால் முட்டிப் போட்ட கோல்தான் மறக்க முடியாதது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பெலே.பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற மறுநாள் 'தி சண்டே டைம்ஸ்' இந்த தலையங்கத்தை வெளியிட்டது. How do u Spell Pele?? G-O-D. பிரேசிலுக்கு மூன்று உலகக் கிண்ணங்களைப் பெற்றுத் தந்த பெலே 1970 ஆம் ஆண்டு தேசியக் குழுவிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சாண்டோஸ் குழுவுக்கு ஆடினார். 1974 ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி காஸ்மாஸ் காற்பந்துக் குழுவின் தலைவர் தனது குழுவுக்காக விளையாடும்படி கேட்டுக்கொண்டார். பெலே தன் குழுவுக்கு ஆடினால் அமெரிக்காவில் காற்பந்தாட்ட மோகம் ஏற்படும் என்று அவர் நம்பினார். பெலேயும் இரண்டு ஆண்டுகள் அமெரிக்கர்களுக்கு தன் காற்பந்தாட்டாத் திறமையைக் காட்டி 1978 ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்திய பெருமை பெலேயையேச் சாரும். அவரது ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த 761 பத்திரிக்கையாளர்களும், சில நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டு அவருக்குப் பிரியா விடை அளித்தனர்.